சிக்கலில் பிரமாண்ட வீடு.. நிலம் எப்படி வந்தது? நெருக்கடியில் செந்தில் பாலாஜி…..

213
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வட்டாரத்தில் இன்று நான்காவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வரும் நிலையில் முக்கிய திருப்பமாக ரெய்டு வலையில் சிக்கிய ‘செந்தில்பாலாஜியின் பிரமாண்ட வீடு’ குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இதற்கு மத்தியில், கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது.

அதுகுறித்து அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். தற்போது கரூர் மற்றும் கோவையில் செந்தில்பாலாஜியின் வட்டாரங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில் கரூரில் கட்டப்பட்டு வரும் அந்த பிரமாண்ட வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அது தொடர்பான வீடியோவையும் சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ளார். செந்தில்பாலாஜி பிரம்மாண்ட வீடு கட்டி வருவதாக சவுக்கு சங்கர் புகைப்படம் வெளியிட்ட பிறகுதான் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் இன்று அதுகுறித்து பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில், கரூரில் கட்டப்பட்டு வரும் அந்த வீட்டின் சகோதரரின் மனைவி நிர்மலாவின் தாயார் பரிசுப் பத்திரம் மூலம் பரிசாக அளித்ததாகவும் புதிதாக சொத்து எதுவும் வாங்கப்படவில்லை என்றும் கூறினார். ஆனால், செந்தில் பாலாஜி பொய் சொல்லியிருப்பதை இந்த ஆதாரம் நிரூபிக்கிறது.