சொன்னதை செய்து முடித்த வைரமுத்து! நந்தினி வீட்டில் குவிந்த ஊர்மக்கள்….!

166
Advertisement

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவி நந்தினிக்கு தான் பெற்ற தங்க பேனாவை பரிசாக தருகிறேன் என கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடந்தது. தமிழகத்தில் 8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

இந்த தேர்வில் திண்டுக்கல் அரசு பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தச்சு தொழிலாளியின் மகளான இவருக்கு சிஏ படிக்க விருப்பம் என தெரிவித்துள்ளார். ஏழ்மையிலும் பெற்றோருக்கும், அரசு பள்ளிக்கும் பெருமை சேர்ந்த நந்தினிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் அவரை கவிஞர் வைரமுத்துவும் பாராட்டியிருந்தார்.

இவ்வாறு தனது ட்விட்டரில் வைரமுத்து கூறியிருநதர். இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் மாணவி நந்தினி முதல்வர் ஸ்டாலினிடமும் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். உயர் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்