மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால் மிரட்ட முடியாத உண்மையான எதிர்க்கட்சி நாட்டிற்கு தேவை என்று தெரிவித்தார். தற்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், விசாரணை அமைப்புகள் மீது உள்ள பயத்தால், ஆளுங்கட்சியை எதிர்க்க அஞ்சுவதாக தெரிவித்தார்.
இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார். மம்தா பானர்ஜி நாட்டின் பிரதமராக வேண்டும் வர வேண்டும் என்றும், துணிச்சல்மிக்க மம்தா பானர்ஜியை மிரட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இன்றைய சூழ்நிலையில் நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணி மம்தா பானர்ஜிதான் என்றும் சுப்பிரமணியசுவாமி தெரிவித்தார். ஒரு காலத்தில் ஜெயலலிதா சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.