கேரளாவில் சுற்றுலா  படகு கடலில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில், நீரில் மூழ்கி  5 சிறுவர்கள் உட்பட 21  பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடைய செய்துள்ளது…

125
Advertisement

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் சென்றதாக கூறப்படுகிறது.  அப்போது திடீரெனெ படகு கவிழ்ந்ததில் அனைவரும் கடலில் மூழ்கினர் . தகவலறிந்த தீயணைப்பு மீட்பு படையினர் 8 பேரை உயிருடன் மீட்டு, மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். .  5  சிறுவர்கள் உட்பட 21  பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். . மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மீட்பு படை மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உள்ளுர் மீனவர்களும் அவர்களுடன் இணந்து பணியாற்றி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் கடலில் மூழ்கியவர்களை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.  இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

.