சமீபத்தில், ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக டிக்கெட் பரிசோதகர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து எழுவதால், உண்மைத்தன்மை அறிவதற்காக, டிக்கெட் பரிசோதகர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதலில், மத்திய ரயில்வேயில் சோதனைமுறையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 50 ‘பாடி கேமரா’க்கள் மும்பை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும், தேவையற்ற பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.