இந்தியாவில் அடுத்த 5 ஆண்டில் வேலைவாய்ப்பு 22 சதவிகிதமாக சரியும் என உலக பொருளாதார மன்றம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது…

246
Advertisement

உலக பொருளாதார மன்றம், உலகளாவிய எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.

803 நிறுவனங்களின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில், உலகளாவிய வேலைவாய்ப்பு 23 சதவீதம் சரியும் என கூறப்பட்டுள்ளது. வருகின்ற 2027 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 8.3 கோடி வேலைகள் அடியோடு காலி செய்யப்படும் என்றும், இந்தியாவை பொறுத்தவரை, அடுத்த 5 ஆண்டில் வேலைவாய்ப்பு 22 சதவிகிதமாக சரியும் எனவும் தெரிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டில் மனித உழைப்பை விட இயந்திரமயமாக்கலை அதிக நிறுவனங்கள் விரும்பும் என்றும் இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முதலிடத்தை பிடித்துள்ளது எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.