சென்னை கிண்டி கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில், சுமார் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில்,
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், மூளை நரம்பியல், புற்றுநோய், சிறுநீரகம், ரத்தநாள அறுவை சிகிச்சை என பல்வேறு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவுகளை கொண்டுள்ளது. இந்த மருத்துவமனை 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையாக கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த மருத்துவமனை திறந்துவைக்க, குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இதற்காக இன்று இரவு டெல்லி புறப்பட்டு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, மருத்துவமனையை திறந்து வைக்குமாறு நேரில் அழைப்பு விடுக்க உள்ளார்.