தயவுசெஞ்சு இனிமேல் முட்டை ஓட்டை தெரியாமல் கூட தூக்கி ஏரியாதீர்கள்!!

200
Advertisement

பொதுவாக அநேக மக்களுக்கு முட்டை என்றால் கொள்ளை பிரியம் என்றே கூறலாம்,அனைவரும் முட்டையை சாப்பிட்டு விட்டு அதன் ஓட்டை தூக்கி எரிந்து விடுவார்கள்.

அப்படி தூக்கி எறியப்படும் முட்டை ஓட்டில் ஏராளமான நன்மைகள் உள்ளனவாம் அவை என்னென்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.

முட்டையிலிருக்கக்கூடிய வெளிப்புற அமைப்பில் அதாவது முட்டை ஓட்டில் கால்சியம் கார்போனேட் மற்றும் protein-கல் நிறைந்து காணப்படுவது மட்டுமில்லம்ல பிற தாதுக்களும் இருக்கிறதென்று  சொல்லப்படுகிறது.

தோராயமாக ஒவ்வொரு முட்டையிலும் 70 சதவிகிதம் கால்சியம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

முட்டை ஓடுகளில் காணப்படும் கால்சியம் கார்போனேட் நம் எலும்புகளை உருவாக்கவும் வலுப்படுத்தவும் உதவுகிறதாம்,கால்சியத்தின் உள்ளடக்கம் பல நோய்கள் உருவாகும் அபாயத்தை குறைகிறதாம். தூள் வடிவில் முட்டை ஓடுகளை உட்கொள்ளும் போது, மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உங்கள் உணவில் இதனை  சேர்க்கும் முன் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது. முட்டையை வேகவைத்து, முட்டை உரித்து விட்டு ஓட்டை உடைத்து, பின்னர் அதை உட்கொள்வதற்கு முன் பொடியாக அரைத்து சாப்பிடுவதாகும். இதை உணவுடன் உட்கொள்ளலாம் அல்லது சாறு அல்லது தண்ணீருடன் உட்கொள்ளலாம்என கூறப்பட்டிருக்கிறது.

 முட்டை ஓட்டின் பக்க விளைவுகளை பொறுத்த வரையில், முட்டை ஓடுகளை எப்போதும் சிறிய துண்டுகளாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் பெரிய துண்டுகள் தொண்டை மற்றும் உணவுக்குழாயை காயப்படுத்தலாம்.

இதனை பயன்படுத்தும் முன்பு மருத்துவ நிபுணரை அணுகி பயன்படுத்துமாறு அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.