ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சப்தகிரி, இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குழந்தை கருத்தரிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதற்காக கணவன், மனைவி இருவரும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். கருத்தரிப்புக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் சப்தகரியின் விந்தணு மற்றும் சவிதாவின் கருமுட்டை ஆகியவற்றை பெற்று 13 கருமுட்டைகளை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 3 கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி அதனை கடந்த மாதம் 22 ஆம் தேதி சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என மருத்துவர்கள் கணவன் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 கருமுட்டைகளில் 2 கருமுட்டைகள் மட்டும்தான் கருப்பைக்குள் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கருமுட்டையை தற்போது கருப்பைக்குள் வையுங்கள். அதன் மூலம் மீண்டும் கருத்தரிக்கலாம் என கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் 3 கருமுட்டைகளையும் கருப்பைக்குள் வைத்து கருத்தரிக்க சிகிச்சை அளித்தோம்…