லைவ் ஸ்ட்ரீமில் மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் 

561
Advertisement

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் தனது முன்னாள் மனைவியை லைவ் ஸ்ட்ரீமின் போது எரித்து கொலை செய்த்தவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம்  உத்தரவுப்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பதினொரு வருடங்கலாக லூவும் அவரது மனைவி லாமுவும் ஒன்றாக வாழ்ந்துவந்த நிலையில், இருவரும் TikTok இன் சீனப் பதிப்பான Douyin இல் பிரபலமானவர்கள் என கூறப்படுகிறது.

சில காரணங்களுக்காக இருவரும் பிரிந்தனர்.இருந்தும் லு விவாகரத்து பெற விரும்பவில்லை ஆனால் அவரின் மனைவி லாமு விவாகரத்து வேண்டும்  என்று உறுதியாகா இருந்தார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் , மனமுடைந்த லு  தனது முன்னாள் மனைவியின் வீட்டிற்குச் சென்று, அவர் டூயினில் நேரலையில் இருந்த போது , ​பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். ஆன்லைனில் லமோ என்று அழைக்கப்பட்ட 30 வயது பெண், சில வாரங்களுக்குப் பிறகு காயங்களால் இறந்தார்.

இதையடுத்து ,இந்த விவகாரத்தில்  அந்நட்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, டாங்  லு செய்த  கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு   தூக்கிலிடப்பட்டார்.