ஏன் அலுமினிய பாத்திரத்தில் சமைக்க கூடாது?

1486
Advertisement

பல இந்திய சமயலறைகளில், சமையல் செய்ய பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளில் முக்கிய பங்கு வகிப்பது அலுமினிய பாத்திரங்கள்.

அலுமினிய பாத்திரங்களில் சமைப்பது, அதிலும் குறிப்பாக எண்ணெயில் பொரிக்க பயன்படுத்தும் போது அதிக வெப்ப நிலையில் சூடாகும் எண்ணெயில், அலுமினிய துகள்கள் கலக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

நம் உட்கொள்ளும் அலுமினியத்தின் அளவு கூடும் போது, எலும்பு முறிவு, சிறுநீரக செயலிழப்பு என பல உடல் உபாதைகள் ஏற்படும் என முந்தைய ஆய்வுகள் கூறி வந்த நிலையில், அண்மையில் வடோதரா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உணவியல் ஆராய்ச்சியாளர்கள், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில், 0.1 இல் இருந்து 5 சதவீதத்திற்கு மேல், அலுமினியம் உடலில் உள்வாங்கப்படும் போது மூளை செயல்பாட்டை குறைக்கும் அல்சைமர்(Alzheimer) நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

பொதுவாகவே, அலுமினியம் மூளையை மந்தமாக்கி, தெளிவான முடிவெடுக்கும் திறனை குறைப்பதாக கூறும் மருத்துவர்கள், அலுமினிய பாத்திர பயன்பாட்டை தவிர்த்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) அல்லது இரும்பு பாத்திரங்களை உபயோகிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.