சக்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?

261
Advertisement

நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் சக்கரையை செரிமானம் செய்ய தேவைப்படும் இன்சுலினை, கணையத்தால் சுரக்க முடியாமல் போகும் பட்சத்தில் ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு உயர்வதையே சக்கரை நோய் என அழைக்கிறோம்.

சக்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடுவதாலேயே சக்கரை நோய் வருவதில்லை. எனினும், சக்கரை அதிகம் இருக்கும் உணவுப்பண்டங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவது, சக்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

நேரடியான சக்கரையை மட்டும் சாப்பிடாமல் இருக்கும் பலரும் பிஸ்கட், ஜூஸ், சாக்லேட், Tomato சாஸ், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளில் இருக்கும் மறைமுக சக்கரையை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதன் விளைவாக உடல் பருமன், பல் சொத்தை, நோய்  எதிர்ப்பு சக்தி குறைவு துவங்கி பெரிய பாதிப்புகள் வரை ஏற்படுகிறது.

சரியான அளவு புரதம் உள்ள காலை உணவை உட்கொள்வதால், தேவையற்ற இடைவெளிகளில் சாப்பிட வேண்டிய தேவை குறைவதாக கூறும் மருத்துவர்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது, நொறுக்கு தீனி  சாப்பிடுவதை குறைப்பது, சோடா, கோலா போன்ற சக்கரை அதிகம் இருக்கும் குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்து சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றினாலே சக்கரை நோய் தாக்கும் வாய்ப்புகளை குறைக்க முடியும் என கருத்து தெரிவிக்கின்றனர்.