Revaluationக்கு விண்ணப்பிப்பது எப்படி?

359
Advertisement

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை அடுத்து, குறைவான மதிப்பெண் பெற்ற மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, Revaluation  என அழைக்கப்படும் மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. 

8,06,277 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம், 93.76 ஆக உள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வின் மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே கல்லூரிகளில், தாங்கள் விரும்பிய துறை சார்ந்த படிப்புகளில் இணைந்து படிக்க முடியும் என்பதால், பெரும்பாலான மாணவர்கள் revaluation முறையை பயன்படுத்துவது வழக்கம்.

அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிக்கும் இணையத்தளத்தில், மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத்தாள்களை பெற்று கொள்ளலாம்.

விடைத்தாளை பார்த்த பின், கூடுதல் மதிப்பெண் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கருதினால் மறுமதிப்பீடுக்கும், மதிப்பெண் கூட்டலில் தவறு இருந்தால் மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுமதிப்பீடு செய்யும் போது, மதிப்பெண் குறையவும் வாய்ப்புள்ளது என்பதை மாணவர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.