செவ்வாய் கிரகத்தில் “பளபளப்பான” பொருள் ஆச்சிரியத்தில் உலக நாடுகள் !

294
Advertisement

செவ்வாய் கிரகத்தில் ஆய்வின்  தேடலில் உயிரினங்கள் வாழ்வாதாரத்திற்கான ஆதாரங்கள் இதுவரை  கண்டுபிடிக்கவில்லை என்ற நிலையில்,  ” பளபளப்பான பொருள்” ஒன்று கண்டுபிடப்பட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கும் நோக்கில் பல்வேறு ஆய்வு நடவடிக்கைளை எடுத்துவருகின்றன உலக நாடுகள். அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அனுப்பியது தான் பெர்சவரென்ஸ் ரோவர்.

கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த  பெர்சவரென்ஸ் மூலம் தான் இந்த புகைப்படம் அனுப்பட்டுள்ளது.  செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, புவியியல் ஆகியவை குறித்து இந்த ரோவர் ஆராய்ச்சி செய்து வரும்நிலையில்,இந்த புகைப்பதை எடுத்துள்ளது ரோவர்.

நாசாவால் வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படும் உலகையே பரபரப்பாகி உள்ளது.இது குறித்து விளக்கமளித்துள்ள நாசா ஆராய்ச்சியாளர்கள்  ,  செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கியபோது வெளிப்பட்ட தெர்மல் பிளாங்கெட் தான் அது என தெரிவித்திருக்கிறார்கள்.

இருப்பினும், ராக்கெட் தரையிறங்கிய இடம், இந்த பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருப்பதாகவும், ஒருவேளை செவ்வாய் கிரகத்தின் பலமான காற்றால் இந்த பொருள் இங்கே வந்திருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.