அமெரிக்க்காவின் நியூயார்க் நகரத்தில் “ஹெலிகாப்டர்” பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக உள்ளூர் சுற்றுலா முதல் செல்வந்தர்கள் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயன்படுத்துவது வரை தினம்தோறும் வீடுகளுக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறக்கும் சூழல் உள்ளது.
இந்நிலையில்,பெரிய “ஹெலிகாப்டர்” பரப்பப்பதால் வீடு அதிர்வதாகவும், குழந்தைகளை தூங்கவைக்க முடியவில்லை மேலும் வயதானவர்கள் இதன் காரணமாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பிரச்சனை முதல்முறை அல்ல,கொரோனாவிற்க்கு பிறகு,மீண்டும் இந்த பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது அந்த நகரில்.மேலும் இதன் காரணமாக காற்றை மாசுபடுத்துகின்றன, ஒலி மாசுபாட்டை உருவாக்குகின்றன எனவும்.
கடந்த ஆண்டு, ஹெலிகாப்டர் சத்தம் குறித்து புகார் தெரிவித்து நகரத்தின் உதவு எண்ணிற்கு 25,821 அழைப்புகள் வந்தன, இது 2020ல் 10,359 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாத தொடக்கத்தில், நியூயார்க் மாநில சட்டமன்றம், “நியாயமற்ற” இரைச்சல் அளவை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 7,82,170.50 ரூபாய் அபராதம் விதிக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது.
ஒரு ஹெலிகாப்டர் சராசரி காரை விட ஒரு மணி நேரத்திற்கு 43 மடங்கு அதிகமான கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது என்று கூறப்படும் நிலையில் இந்த நிவாகரம் மீண்டும் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது