மனிதனின் வாழ்வில் ஆசைப்படும் செல்வங்களில் அனைத்திலும் முதலாவது “ஆயுட்காலம்”.பூமியின் காற்று தூய்மையாக இருந்தது ஒரு காலகட்டத்தில்.தூய்மனையான சுற்றுசூழல்,விவசாயம்,ஆரகோரியமான உணவு முறை என வாழ்ந்துவந்த மக்கள் நோய்களில் இருந்து விலகி இருந்தனர்.
ஆனால் காலப்போக்கில் மனிதர்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளனர்.புதிய உணவு வகைகள் , பல புதிய வாகன வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. இதனுடன்,ஆராச்சி என்ற பெயரில் குணப்படுத்த முடியாத பல நோய்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் காரணங்களால் முன்பை விட இப்போது மனிதனின் வயது குறைந்துள்ளது. பல புதிய நோய்கள் மற்றும் விபத்துக்களால் மக்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். ஆனால் மக்கள் இன்னும் நீண்ட ஆயுளை வாழும் சில நாடுகளில் உள்ளன.worldometers.info வெளியிட்டுள்ள புள்ளிவிரகங்கள் படி,
“ஹாங்காங்” முதல் இடத்தில் உள்ளது.இந்நாட்டின் இருபாலரின் சராசரி வயது வரம்பு 85 ஆண்டுகள். இதில் பெண்கள் 88 வருடங்களும், ஆண்கள் 82 வருடங்களும் வாழ்கின்றனர். பெண்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு ஒரு சிறப்புக் காரணம் உண்டு. இரவும் பகலும் கடுமையாக உழைத்து, நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் உள்ளதால், இந்நாட்டு பெண்கள் அதிகம் வாழ்கின்றனர்.
பட்டியலில் இரண்டாவது இடம் இருப்பது “ஜப்பான்”. இங்குள்ள மக்கள் சராசரியாக 85 ஆண்டுகள் வாழ்கின்றனர். இதில் பெண்கள் 88 வயதும், ஆண்கள் 81 வயதும் வாழ்கின்றனர். இங்குள்ள முதியவர்கள் மிகக்குறைந்த நோய்களால் இறக்கின்றனர்.
மூன்றாவது “மக்காவ்” . இந்நாட்டு மக்களின் சராசரி வயது 84. இதில் பெண்கள் 87 வருடங்களும், ஆண்கள் 81 வருடங்களும் வாழ்கின்றனர்.
நான்காம் இடத்தில் “சுவிட்சர்லாந்து” உள்ளது .இந்த நாட்டில் மக்கள் சராசரியாக 84 ஆண்டுகள் வாழ்கின்றனர். பெண்கள் 86 ஆண்டுகளும் ,ஆண்கள் 82 ஆண்டுகள் வரை வாழ்கின்றனர். இங்குள்ள மக்களிடையே மன அழுத்தம் குறைவாக இருப்பதே மக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம். மேலும், இங்கு மாசுபாடும் மிகக் குறைவு.
அதைத்தொடர்ந்து “சிங்கப்பூர்” உள்ளது . இங்குள்ள மக்களின் சராசரி வயது 84. இதில் பெண்கள் 86 வயதும், ஆண்கள் 82 வயதும் வாழ்கின்றனர். இங்குள்ள வலுவான மருத்துவ நிலையே மக்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாகும்.