12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

    303

    தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 12ம் வகுப்பி பொதுத்தேர்வு ரத்தானது. அம்மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 

    அந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி, கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 19ம் தேதி வரை மறுதேர்வு நடைபெற்றது.

    இந்த நிலையில், மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மாணவர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், வரும் 15 மற்றும் 16ம் தேதிகளில் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணபிக்கலாம் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.