அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வரும் ஜனவரி ஒன்றாம்தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று 110 – வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்படி, அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்கத்தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
வேலைநிறுத்தப்போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்தார்.
மேலும், அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
வரும் ஜனவரிமாதம் முதலே அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58 வயதில் இருந்து 60 வயதாக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்மூலம், சுமார் 16 லட்சம் அரசுஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.