தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் அளிக்க வேண்டும் என பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலை நேரம் முழுவதும் நின்று கொண்டிருக்கும் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இருக்கை வசதி வழங்குதல் அவசியமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மாநில தொழிலாளார் ஆலோசனைக்குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்குவதற்கு குழுவின் உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டது.
ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்யும் வகையில், சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.