9 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரும் ஆல்பாஸ்

295

பள்ளிக்கல்வித்துறை சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9-ம் வகுப்புக்கான இறுதி ஆண்டுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு சென்று முழு ஆண்டுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வுகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தையொட்டி, வகுப்புகள் முழுமையாக நடைபெறாததால், பாடத்திட்டத்தை நிறைவு செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், 9 ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி, தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக பள்ளிக்கல்வி்த்துறை அறிவி்த்துள்ளது.