ஆரோக்கியத்துக்கு ஆப்பு வைக்கும் 8 அன்றாட பழக்கங்கள்! இனி இந்த தவறுகளை செய்யாதீங்க…

157
Advertisement

தெரிந்தோ தெரியாமலோ நாம் சில பழக்கங்களை அன்றாடம் செய்து வருகிறோம்.

ஆனால், அவை ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவனாக இருப்பதால் அவற்றை கண்டறிந்து உடனே மாற்றுவது அவசியம். மதிய உணவு, இரவு உணவு சாப்பிட்ட உடனே படுத்து தூங்குவது சில பேருக்கு பழக்கம்.

ஆனால், இப்படி செய்வது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தி, வயிற்றில் கொலஸ்ட்ரால் தேங்க காரணமாக அமைந்து தொப்பை உருவாக வழிவகுக்கிறது. வேலை செய்யும் போது, bore அடிக்கும் போது என பொழுதைக்கும் காதுகளில் headphones அணிந்திருப்பதால் காது ஜவ்வுகள் பாதிக்கப்பட்டு காது வலி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

காலையில் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்பதற்காக, இரவு தூங்கபோகும் முன் கடமைக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு உடனடியாக தூங்க சென்றால் தீவிர அஜீரணக் கோளாறுகள் ஏற்படக் கூடும். கட்டிலில் தலைகுப்புற படுப்பதால் கழுத்து எலும்புகளின் அழுத்தம் அதிகரித்து, கழுத்து வலி, முதுகு வலி மற்றும் சதை பிடிப்பு பாதிப்புகள் ஏற்படும்.

அதிகமான toothpaste உபயோகிப்பது, நீண்ட நேரம் பல் துலக்குவது எனாமல் சிதைவை ஏற்படுத்தும் என்பதால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பல்துலக்குவதை தவிர்க்க வேண்டும். டீ, காபி குடித்த பின்னர் உடனடியாக தண்ணீர் குடிப்பது வயிற்று உபாதைக்கு வழி வகுக்கும். அதே நேரம், டீ மற்றும் காபி குடிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடல்நலனுக்கு உகந்தது.

சிலர் அடிக்கடி கைவிரல்களில் சொடுக்கு உடைத்து கொண்டே இருப்பார்கள். ஆனால், இந்த பழக்கத்தினால் நரம்புத்தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பணத்தாள்களை எண்ணும் போது மற்றும் புத்தகத் தாள்களை திருப்பும் போது எச்சில் தொடுவது பலருக்கும் வழக்கம். இதனால் கிருமிகள் பரவி பல்வேறு விதமான நோய்கள் பரவும் என்பதை கருத்தில் கொண்டு சுகாதாரமான நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்.