இனி ஆண்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்  

394
Advertisement

பிறந்த குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே  உணவாகக் கொடுக்க வேண்டும், ஏனெனில் குழந்தையின் வளர்ச்சி மாற்றத்தில் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவை மேம்படுத்துவதில் பெரும் பங்கை தாய்ப்பால் வகிக்கிறது.

ஆனால் தற்போது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்களும், மேலும் ஆண்களும் தாய்ப்பால் கொடுக்கலாமா? என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துள்ளது, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள் குழந்தை பெற்றபிறகு தான், இதைப் பற்றி யோசிக்கிறார்கள், ஆனால் தாய்மை அடையாமலே ஹோர்மோனல் திரப்பி வழியாக தாய்ப்பால் கொடுக்கமுடியும், இது சம்மந்தமான சிகிச்சை அளிப்பதோடு, குறிப்பிட்ட மாதங்களுக்கு மாத்திரை கொடுப்பார்கள், எனவே உடல் அதை ஏற்றுக் கொண்டு , உடலில் குழந்தையுள்ளது என்று மனமும் மற்றும் உடலும் ஏற்று கொண்டு பால் சுரக்க தொடங்கும், பின்னர் உடல் பழகி தானாகவே பால் சுரக்கத் துடங்கிவிடும்.

அதுபோலவே ஆண்கள் தாய்ப்பால் கொடுப்பதும் இன்றைய நவீன மருத்துவத்தில் சாத்தியமாகும், தாய்ப்பால் கொடுப்பதற்கு மார்பகம் மற்றும் பிட்யூட்டரி க்ளாண்ட் இருந்தால் போதும்.அதற்கென தனி மருத்துவச் சிகிச்சைகள் உள்ளன. ஏற்கெனவே மேலை நாடுகளில் இந்த முறை உள்ளது. நம் நாட்டுக்கு இதைப் பற்றி இன்னும் பெரிதாக யாருக்கும் தெரியாது.