ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது – பிரதமர் மோடி மகிழ்ச்சி

124

ஆசிய யானைகளில் 60 சதவீதம் இந்தியாவில்தான் உள்ளது என்பதில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலக யானைகள் தினமான இன்று அவரது டுவிட்டர் பதிவில், உலக யானைகள் தினத்தில் யானைகளைப் பாதுகாப்பதில் தங்களின் நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்கிறோம் என தெரிவித்துள்ளார். ஆசிய யானைகளில் 60சதவீதம் இந்தியாவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகளில் யானைகள் காப்பகங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். யானை பாதுகாப்பில் உள்ள வெற்றிகள், மனித-விலங்கு மோதலை குறைப்பதற்கும், உள்ளூர் சமூகங்களை ஒருங்கிணைத்து சுற்றுச்சூழல் உணர்வை மேம்படுத்துவதில் பெரிய முயற்சிகளின் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.