5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போது…

399
Advertisement

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல  மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, புதுச்சேரி, காரைக்கால், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டதுடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

சூறைக்காற்று வீசும் என்பதால் வங்ககடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.