2022ம் ஆண்டில்…. “23 நாட்கள் பொதுவிடுமுறை”… அரசு அறிவிப்பு!!

155
Advertisement

தமிழக அரசு 2022ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ஆம் ஆண்டில் 23 நாள்கள் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி ஆகிய தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மே தினம், ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தியும், ஆயுத பூஜை, விஜயதசமி, மிலாது நபி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொதுவிடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.