2 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை…

247
Advertisement

கேரளாவில் இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைக் காலம் முடியவுள்ளதை அடுத்து, கேரளா முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வரும் அக்டோபர் 1-ம் தேதி வரை மழை தொடரும் என தெரிவித்த திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம், இடுக்கி, திருச்சூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு, அதி தீவிர கன மழைக்கான “ரெட் அலர்ட்” எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும், எர்ணாகுளம் மாவட்டத்திற்கு அதி கன மழைக்கான “ஆரஞ்ச் அலர்ட்டும்”, இதர மாவட்டங்களுக்கு கன மழைக்கான “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்