ஆந்திராவில் கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன

190

ஆந்திராவில் பெய்த கனமழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வேலுகோடு நீர்த்தேக்கம் அருகேவுள்ள வனப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 500 மாடுகளை, காட்டுப்பன்றிகள் விரட்டியதால், நீர்த்தேக்கத்திற்குள் மாடுகள் இறங்கின. அப்போது ஆர்ப்பரித்து சென்ற வெள்ளத்தில் மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அதனைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் படகுகளில் சென்று 300 மாடுகளை மீட்டனர். எனினும் கடும் வெள்ளத்தில் சிக்கிய 150 மாடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் 150 மாடுகள் அடித்துச் செல்லப்பட்டதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.