12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போக வாய்ப்பு? இதுதான் காரணம்…

181
Advertisement

நடப்பு கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெற்றது.

எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதிய நிலையில்,  79 மையங்களில் நடந்து வந்த தேர்வுத் தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

மே 5ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்வு தேதி முடிவை வேறு நாளைக்கு மாற்ற பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 7ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், மே 5ஆம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கவனக்குறைவு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, மே 7ஆம் தேதிக்கு பிறகு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது