Advertisement

உதகையில் 124வது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கண்களை கவரும் வகையில், பல்வேறு மலர்களால் ஆன அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தின் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான 124-வது மலர்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மலர் கண்காட்சியை ஒட்டி, 75 ரகங்களில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

பல ஆயிரம் தொட்டிகள் புது பூங்காவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

பல வண்ணங்கள் கொண்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் மலர்களை கொண்ட கோவை வேளாண் பல்கலைக்கழக கட்டிடத்தின் முகப்பு தோற்றம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அவர்களின் உருவங்கள் 15 ஆயிரம் கொய் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் மலர்களால் உதகை 200 சிறப்பு மலர் அலங்காரங்களும் இடம்பெறுள்ளன.

தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை சுற்றுலாப்பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 6 ஆயிரம்  மஞ்சள்நிற கார்னேஷன் மலர்களை கொண்டு மஞ்சப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறும் மலர் கண்காட்சியை சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலர் கண்காட்சியை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.