மாங்காயை நினைத்தாலே நாறுவூறும். மாம்பழமோ தித்திப்பூட்டும்.
இது மாம்பழ சீசன் என்பதால், விதம்விதமான மாம்பழ ரகங்கள்
சந்தைக்கு வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஒரே மாமரத்தில்
121 ரக மாம்பழங்கள் விளைந்து தித்திப்பூட்டுவதுடன் ஆச்சரியப்படவும்
திகைப்படையவும் செய்கின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இந்த மாநிலத்திலுள்ள சஹரன்பூர் மாவட்டம் மாம்பழ விளைச்சலுக்குப்
பேர்போன மாவட்டமாகும். இந்தப் பகுதியிலுள்ள தோட்டக்கலை இந்த
சாதனையை நிகழ்த்தியுள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு மாமரக்கன்றை நட்டு அதைப் பராமரிக்க
ஒரு வேலையாளையும் நியமித்தது சஹரன்பூர் மாவட்டத் தோட்டக்கலைத்
துறை. 10 ஆண்டுகளில் கன்று மரமாக நன்கு வளர்ந்தது.
இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்குப் புதுமையான சோதனை
முயற்சியாக இந்த மாமரத்தின் கிளைகளில் வெவ்வேறு மாமரக்
கிளைகளை ஒட்டுப்போடுதல் முறையில் இணைத்தனர். அந்த முயற்சி
வெற்றிபெறத் தொடங்கியுள்ளது.
தற்போது இந்தக் கன்று மரமாகிக் காய்க்கத் தொடங்கியுள்ளது.
இதில் சிறப்பு என்னவெனில், இந்த ஒரே மரத்தில் 121 வகையான
மாங்காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு மாங்காயும்
வெவ்வேறு சுவை உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த மாமரத்தைப்
பலரும் நேரில் வந்து பார்த்துச் செல்வதுடன், இந்த மாழ்பழங்களை
தின்று மகிழ்கின்றனர்.
புதுசா சிந்திக்கிறாங்க…அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறாங்க…
மகசூலை அள்ளுறாங்க….
இனிமேல், நீங்களும் புதுசுபுதுசா யோசிங்க….