காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர்…

113
Advertisement

ஜெருசலேம், பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே அவ்வப்போது சண்டை நடைபெற்று வருகிறது.

பாலஸ்தீன உண்ணாவிரத போராட்ட பிரபலம் காதர் அட்னன் அண்மையில் மரணம் அடைந்ததால், அந்நாட்டில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜிகாத் அல்-கன்னம், கலீல் அல்-பாதினி மற்றும் டாரீக் இஜ் அல்-தீன் ஆகிய 3 தலைவர்கள், அவர்களது மனைவிகள், குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் இயக்கம் தெரிவித்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் இன்று அதிகாலை 2 மணியளவில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கிய தலைவர்கள் உள்பட 12 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் வரை காயம் அடைந்து உள்ளனர்.