1.5 கோடி செல்சியஸ் வெப்பம் சுட்டெரிக்கும் செயற்கை சூரியன்

285
Advertisement

சீன அணுக்கரு இணைவு உலை ஒரு பிரம்மாண்டமான சாதனையைச் செய்துள்ளது, 1999 ஆம் ஆண்டு முதல் East என்ற செயற்கை சூரியனை உருவாக்கும்,திட்டத்தை செயல்படுத்திச் சாதித்துள்ளது,

இதற்காக ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவு செய்துள்ளது, அதாவது இந்திய ரூபாய்யின் இன்றைய மதிப்பிற்கு, சுமார் 81 ஆயிரம் கோடியாகும்.

இந்த செயற்கை சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை, ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது, இது மனித குலத்திற்குப் பல வழிகளில் பயன் அளித்து வருகிறது.

சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு 7 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளியிட்டது. சுமார் 17 நிமிடங்களுக்கு, இந்த வெப்பநிலை நீடித்தது, இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும்

தூய்மையான, மாசு இல்லாத எரிசக்தியைத் தயாரிப்பதற்காகச் சீனாவின் முயற்சியை உலக நாடுகள் பாராட்டி வருகிறது.    

சீனாவின் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்சில் இட்டர் என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கி வருகின்றனர்.