ரத்த சோகை உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ! தவிர்க்க நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்?

357
Advertisement

ரத்த சோகை யாருக்கு,எதனால் ,எப்படி மற்றும் தவிர்க்கும் உணவுகள் என்ன என்ன ?போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி காட்சியாக இது அமையும்.

ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது.இந்த ரத்த சோகை ஆன்,பெண் என இருபாலருக்கும் வரக்கூடிய ஒன்று குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை குறைபாட்டை சரிசெய்துவிடவேண்டும் இல்லாவிட்டால்  திருமணமாகிய பின்னர் அப்பென்னிற்கு பிறக்கும் குழந்தையும் அதே குறைபாட்டுடன் பிறக்கும் என்று மருத்துவர்கள் கருத்துதெரிவிக்கின்றனர்.

ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ரத்த சோகை குறைபாடு இருந்தால் அவருக்கு குறைப் பிரசவம், மகப்பேறின்போது அதீத ரத்தப் போக்கு, ரத்த அழுத்தம் அதிகரித்தல், குழந்தையின் எடை குறைதல், மகப்பேறுக்கு பின் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போதல், பிரசவத்துக்கு பிந்தைய உடல்நலக் கோளாறுகள் உண்டாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் ரத்த சோகை உண்டாகப் பரவலான காரணமாக இருப்பது இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறைதான் என்றுக்கூறும் மருத்துவர்கள்,இந்த பிரச்னையை தவிர்க்க கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி , விட்டமின் – சி போன்ற உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும். இரும்புச் சத்துக்காக நாம் உட்கொள்ளும் உணவுகளுடன் சேர்த்து நாம் எதை உண்கிறோம் என்பது குறித்தும் அறிந்து வைத்திருப்பது முக்கியம்; ஏனெனில் சில உணவுகள் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதை ஊக்குவிக்கும், வேறு சில உணவுகள் தடுக்கும் என்கிறார் மருத்துவர்.