எண்ணெய் விலை 52சதவீதம் உயர்வு

418
Advertisement

ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரச தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உணவுத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பேசிய போ, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றுக்கு வரி 5 முதல் ஏழரை சதவீதம் வரை குறைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் 60 முதல் 70 சதவீதம் வரை இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.