கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா 2வது அலை வேகமாக பரவியது. இதனால் தொற்று பாதிப்பும் மற்றும் உயிரிழப்பும் அதிகரித்தது.
மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சியால், கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. இதனால் கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய குழுவினர் முகாமிட்டுள்ளனர்.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ள நிலையில், கொரோனா பரவலை தடுக்க, அம்மாநிலத்தில் இன்றும், நாளையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.