வயிற்றில் இருந்து 6 கிலோ கட்டி அகற்றம்

Advertisement

திருச்சியில் பெண் நோயாளியின் வயிற்றில் இருந்து 6 கிலோ எடை கொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மணமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரின் வயிற்றில் பெரிய அளவில் கட்டி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவ குழுவினர் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் பெண்ணின் வயிற்றில் இருந்த 6 கிலோ கட்டியை அகற்றினர்.

Advertisement

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சையில் 6 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றிய மருத்துவ குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.