வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – முதலமைச்சர் இன்று ஆலோசனை

306
Advertisement

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் ஏற்கனவே கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று நீர் நிலைகள், நீர்த் தேக்கங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்களை எடுப்பது குறித்து பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீக் சக்சேனாவும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் அதிகாரிகள் நிலையில் ஆலோசனைகள் நடந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறியவுள்ளார்.