முதல்வர் நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி

Advertisement

முதலமைச்சர் நாற்காலியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவிடம் ரங்கசாமி சரணாகதி அடைந்துள்ளார் என்று, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்து 5 மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை என்றும் மாநிலத்திற்கு தேவையான நிதியை  மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற பந்த் போராட்டம் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவால் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது என்று கூறிய நாராயணசாமி, இதனை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.