‘முடிஞ்சா மோதிப்பாரு’ உரிமையாளரின் உயிரை காத்த பாசக்கார பூனை

547
Advertisement

உரிமையாளரின் உயிரை காக்க, வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை பூனை தடுத்து நிறுத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் பிமதாங்கி நகரைச் சேர்ந்த சம்பத்குமார் பரிதா என்பவர் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டில் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது.

அதனை பார்த்த அந்தப் பூனை பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நிற்க வைத்துள்ளது.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது உரிமையாளரின் உயிரை காக்க நல்ல பாம்பை பூனை தடுத்து நிறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.