மனதை மயக்கும் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

Advertisement

தமிழக ஆளுநராக பதவியேற்ற உடனே குடும்பத்துடன் மாமல்லபுரம் சுற்றுலா சென்ற, ஆளுநர் R.N.ரவி புராதான சின்னங்களை பார்வையிட்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. ஆளுநருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தின் 15வது ஆளுநராக பதவியேற்ற  R.N.ரவி, நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார்.

உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு சென்ற ஆளுநர் R.N.ரவி புராதான சின்னங்களை குடும்பத்துடன் பார்வையிட்டார்.

Advertisement

அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.