பெகாசஸ் விவகாரம்: எல்லாமே பொய்., உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு.!

364
Advertisement

பெகாசஸ் – ஒட்டுக்கேட்பு பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து அரசியல்தலைவர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் மத்திய அரசு சார்பாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இஸ்ரேல் நாட்டு உளவு நிறுவனத்திடமிருந்து மென்பொருள் எதையும் மத்தியஅரசு தரப்பில் வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள், மற்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.ஆதாரமற்ற, உறுதிப்படுத்தாத, குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க இயலாது என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரிக்க வல்லுநர் குழு அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.