புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு…

242
Advertisement

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்காக ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் ஆயிரத்து 395 முதன்மை வாக்குச்சாவடிகள், 234 துணை வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஆயிரத்து 629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்