பிளஸ் 2 படித்த பெண் 1 கோடி வென்று சாதனை 

270
Advertisement

கோன் பனேகா குரோர்பதி 14 என்ற குவிஸ் நிகழ்ச்சியானது கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடந்த வருகிறது, இதில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு வரும் நிலையில், முதல் முறையாகப் பெண் ஒருவர் 1 கோடி பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார், இதன் முதல் எபிசோடில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர், எனவே சீசன் பதினான்கில் முதல் முறையாக கவிதா சாவ்லா என்ற பெண் ஒருவர் 1 கோடியை  வென்றுள்ளார். மராட்டியத்தின் கோலாப்பூரில் வசிப்பவர் கவிதா. இல்ல தலைவியாக இருந்து வரும் அவர் பிளஸ் 2 வரையே படித்து உள்ளார். எனினும் சாதனை புரிய வேண்டும் என்ற முயற்சியைக் கைவிடாமல் சாதித்து மற்றவர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

இது கடைசி பரிசுத் தொகை அல்ல அடுத்த கேள்விக்கு கவிதா சரியாகப் பதில் கூறினால் அவர் ரூ.7.5 கோடி பரிசுத் தொகையை வெல்வார்.