பாதுகாப்பில் பல அம்சங்களைக் கொண்ட புதிய ஹெல்மெட் 

229
Advertisement

ஸ்டார்ட் அப் நிறுவனமான டைவ்ரா(Tiivra ), தனது முதல் கலப்பு ஃபைபர் (Fiber ) ஹெல்மெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது,  இந்த ஹெல்மெட்டுகள் சாலை மற்றும் தெருக்களின் அதிக விசிபிலிட்டியை (Visibility )வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, 

இதனால் குறைந்த வெளிச்சத்திலும் வாகன ஓட்டிகளுக்கு நல்ல விசிபிலிட்டியை தருவதால் மிகவும் பாதுகாப்பாக அமைகிறது. 

Dot மற்றும் ISI உள்ளிட்ட தரம் சான்றிதழ்களைத் தவிர, உலகின் மிகக் கடுமையான தரம் சோதனைகளில் ஒன்றான ECE 20.6 சான்றிதழுக்காகவும் காத்திருக்கிறது. 

இவை இரவு நேர விசிபிலிட்டிக்காக ரிஃப்லெக்டிவ் (Reflective ) நானோ பார்டிகிள்ஸையும் கொண்டுள்ளது, இதன் பூச்சாக சன்பிளேஸ் (Sunblaze ) ஹை விசிபிலிட்டிக்கு உதவுகிறது. 

இந்த தயாரிப்பை உருவாக்க இரண்டு வருடங்கள் ஆகியுள்ளது, அணைத்து அளவுகளிலும் மற்றும் 6 வண்ணம் நிறைந்த விடிவங்களில் உருவாகியுள்ளது, மேலும் எடை 1250 கிராம் லைட் வெய்டில் உருவாகியுள்ளது. இது வடிவில்  ஸ்டார் பிளேஸ் பூசப்பட்ட ஒரு ஸ்பாய்லரை கொண்டுள்ளது.      

Helmetnews