பணம் வராத ஆத்திரத்தில் ATM இயந்திரம் உடைப்பு

Advertisement

சாத்தான்குளம் அருகே பணம் வராத ஆத்திரத்தில் ATM இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் அடித்து உடைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் கனரா வங்கி ATM செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி ATM-ல் நபர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார்.

அந்த நேரத்தில் ATM இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

ATM-ல் பணம் எடுக்க அந்தநபர், எவ்வளவு முயற்சி செய்தும் பணம் இல்லாத காரணத்தால், ஆத்திரத்தில் கல்லை எடுத்து ATM இயந்திரத்தை அடித்து உடைத்துள்ளார்.

தகவலறிந்து வந்த சாத்தான்குளம் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.