“நான் கட்டாயம் செய்வேன்” – உறுதிமொழி ஏற்ற CM

389
Advertisement

தமிழகஅரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கிவைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

சென்னை கலைவாணர் அரங்கில், கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் வகையில்,  விழிப்புணர்வு தொடர் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

வெல்லும் தமிழகம் எனும் கொரோனா விழிப்புணர்வு குறும்படைத்தையும் முதல்வர் வெளியிட்டார்.  இதையடுத்து, அனைவரும் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தப்படுத்துதல், உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை கடைப்பிடிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.