நடிகர் மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை

Advertisement

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய சமீபத்தில் நடிகை மீரா மிதுன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கேரளாவில் தங்கியிருந்த மீரா மிதுனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பின்னர் மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

Advertisement

இந்த சூழலில், அவரது யூடியூப் சேனலை முடக்க யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளனர்.