திருவள்ளூரில் நடந்த வித்தியாசமான போராட்டம்..

198
Advertisement

திருவள்ளூர் அருகே, புதிய டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என ஒரு தரப்பினரும்,  திறக்க வேண்டுமென மற்றொரு தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி அருகே சிவ்வாடா மேட்டு காலனி பகுதியில் புதிய அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகத்தினர் அனுமதி அளித்திருந்தனர், அதன்படி புதிய கடை திறக்கப்பட இருந்த நிலையில், அப்பகுதி பெண்கள்- ஆண்கள்  என 300க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி, இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடப்பதால், புதிய மதுபான கடை வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டாஸ்மாக் கடை வேண்டாம் என்று ஒரு தரப்பும் டாஸ்மாக் கடை வேண்டும் என்று ஒரு தரப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடை திறக்கப்படும் என்று அறிவித்தனர்