‘தமிழருக்கு பெருமை..’ தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்துக்கு அங்கீகாரம்

210
Advertisement

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் சிலம்பம் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் வீர விளையாட்டான  சிலம்பத்தை மத்திய அரசு அங்கீகரித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்று, அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலம்பம் விளையாட்டை மத்திய விளையாட்டுத் துறை அங்கீகரித்துள்ளதற்கு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிலம்பத்தின் சிறப்புகள் மற்றும் பெருமைகளை குறிப்பிட்டுள்ள அவர், தற்போது ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.