டி -20 உலகக் கோப்பையில் ஜடேஜாவின் முக்கியத்துவம் 

194
Advertisement

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறினார், எனவே காயம் அதிகரித்ததை அடுத்து  அவருக்கு அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடிவெடுக்கப்பட்டது, எனவே அவரின் முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது. 

இருப்பினும் டி – 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை, ஏனெனில் அவர் காயத்திலிருந்து இன்னும் குணமாகவில்லை, எனவே ஜடேஜா அணியில் இல்லாததால் அவரின் முக்கியத்துவம் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

4 வது அல்லது 5 வது இடத்தில் ஜடேஜா மிக சிறப்பாகச் சமீபத்தில் பேட்டிங் செய்துவந்தார், அதுபோல சிறப்பான ஆல்ரவுண்டராக பாண்டியா மற்றும் ஜடேஜா திகழ்ந்தனர், இதனால் இந்திய அணி எல்லாவகையிலும் மிக பலம் வாய்ந்த அணியாக இருந்தது. குறிப்பாக பேட்டிங் ஆடரில் 

அதிலும்  4 வது இடத்தில் இடதுகை பேட்ஸ்மேன் கட்டாயம் வேண்டும் என்று இந்திய அணி எதிர்பார்த்த நிலையில் , ஜடேஜா அந்த இடத்தில்  கச்சிதமாகப் பொருத்துவார் , ஆனால் ஜடேஜா இல்லாததால் அந்த இடத்திற்கு பந்த் (Pant ) சரியாக இருப்பாரா என்பது கேள்வி குறியாகிவிட்டது.  

டி -20 உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்குப் பின்னடைவுதான், சமீபத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நல்ல நிலையில் இருந்தார்,  எனவே இந்திய அணியில் ஜடேஜா இல்லாததைக்  குறித்து கமெண்டில் சொல்லுங்கள்.